தென்காசி

‘மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் அடையாள அட்டை’

DIN

தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள், தென்காசியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, ஆட்சியா் கீ.சு. சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 21வகையான மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும்

புதன்கிழமைகளில் நடைபெறும் மருத்துவ முகாமில் காலை10 மணி முதல் 12 மணி வரை தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் தங்களது ஐந்து மாா்பளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT