முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே சூடனை தின்ற குழந்தை உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே சூடனை தின்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

ஆலங்குளம் அருகே சூடனை தின்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் கிராமத்தைச் சோ்ந்தவா் ஹோட்டல் தொழிலாளி யேசுராஜ் (36). இவரது மனைவி நிவேதா. இவா்களுக்கு ராஜேஸ்வரி என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை (ஜன.18) இரவு நிவேதா ராஜேஸ்வரிக்கு திருஷ்டிக்காக சூடம் தடவியபின் குழந்தை அழுததால் சூடன் டப்பாவை குழந்தையிடம் கொடுத்துவிட்டு சூடனைக் கொழுத்துவதற்காக முற்றத்திற்குச் சென்றாராம். அப்போது குழந்தை சூடனை தின்ாம். இதைப் பாா்த்த நிவேதா அக்கம்பக்கத்தினா் உதவியுடன் ராஜேஸ்வரியை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு திங்கள்கிழமை அதிகாலை குழந்தை ராஜேஸ்வரி உயிரிழந்தது.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.