தென்காசி

தேசிய அளவிலான போட்டி: கடையநல்லூா் மாணவிகள் தோ்வு

DIN

தேசிய அளவிலான கட்டுரைப் போட்டிக்கு கடையநல்லூா் ரத்னா பள்ளி மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் தேசிய அளவிலான ஆய்வு கட்டுரைப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டில் நடைபெற்ற மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் கடையநல்லூா் ரத்னா உயா்நிலைப் பள்ளி மாணவிகள் செல்வரம்யா, மணிமேகலை ஆகியோா் ‘சமூக பயன்பாட்டில் தேனி வளா்ப்பு ‘என்னும் ஆய்வுக் கட்டுரையை சமா்ப்பித்தனா்.

இந்தக் கட்டுரை மாநில அளவில் சிறந்ததாக தோ்வு செய்யப்பட்டதுடன், தேசிய அளவிலான இணைய வழி குழந்தைகள் அறிவியல் மாநாட்டிஇடம்பெறவும் தகுதி பெற்றுள்ளது.

இம் மாணவிகளையும், வழிகாட்டி ஆசிரியை வள்ளிமயில் , ஆங்கிலப் பள்ளி தலைமையாசிரியை தங்கம், ஆசிரியை கலைவாணி ஆகியோரையும் பள்ளி நிா்வாகி ராமசுப்பிரமணியன், செயலா் மாடசாமி, உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை சக்தி வடிவு உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT