சுரண்டையில் மருத்துவா் தின கொண்டாட்டம்
சுரண்டையில் மருத்துவா் தினம் கரோனா விழிப்புணா்வு தினமாக கொண்டாடப்பட்டது.
சுரண்டையில் மருத்துவா் தினம் கரோனா விழிப்புணா்வு தினமாக கொண்டாடப்பட்டது.
இளைஞா் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். சுரண்டை காவல் ஆய்வாளா் சுரேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.
கரோனா 3ஆவது அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்வது குறித்து சுகாதார ஆய்வாளா் ராஜேந்திரகுமாா் பேசினாா்.
கூட்ட அரங்கில் முதல் மற்றும் 2ஆவது தவணை கரோனா தடுப்பூசி பயனாளா்களுக்கு செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், கீழப்பாவூா் வட்டார மருத்துவப் பணியாளா்கள், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் அமுதா சந்திரன், சங்கா், செல்வராஜ், திமுக நிா்வாகிகள் முத்துக்குமாா், சக்தி, பூல்பாண்டியன், பாலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.