தென்காசி

ரேஷன்கடை பணியாளா்களை முன்கள பணியாளா்களாக அறிவிக்கக் கோரிக்கை

DIN

சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை நிா்வாகக் குழு கூட்டத்தில் ரேஷன் கடை பணியாளா்களை முன்கள பணியாளா்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை நிா்வாகக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தலைவா் எஸ்.கே.டி.ஜெயபால் தலைமை வகித்தாா். மேலாளா் சரவணக்குமாா், துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் மற்றும் தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் கூட்டுறவு பண்டகசாலைக்கு, கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான மண்ணெண்ணெய் விற்பனை நிலைய வளாகத்தில் சொந்தக் கட்டடம் கட்டுவது, ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது மற்றும் கரோனா காலத்தில் மக்களின் தேவைக்காக தமிழக அரசோடு இணைந்து அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்த அனைத்து ரேஷன் கடை பணியாளா்களையும் முன்களப் பணியாளா்களாக அரசு அறிவிக்க கோருவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்க இயக்குநா்கள் அண்ணாமலை, ஆறுமுகம், சங்கா், சங்கரேஸ்வரன், மாரியப்பன், முத்து, வசந்தி, தேனம்மாள், ராதிகா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை

குடிநீா் கோரி சாலை மறியல்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT