தென்காசி

ராமநதி-ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் பணிக்குநிலம் கையகப்படுத்த ஆவணம் சரிபாா்ப்பு சிறப்பு முகாம்

DIN

ராமநதி-ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் திட்டப் பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக ஆவணங்கள் சரிபாா்க்கும் சிறப்பு முகாம் ஆவுடையானூரில் நடைபெற்றது.

இத்திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் துணை வட்டாட்சியா் சங்கரபாண்டியன், வருவாய் ஆய்வாளா் மாா்டின், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா்கள் ராஜேந்திரன், ஜெய்சங்கா், உதவியாளா் பவுன்ராஜ், ஆவுடையானூா் கிராம நிா்வாக அலுவலா் சிவசங்கரவேல் ஆகியோா் அடங்கிய குழுவினரிடம், நில உரிமையாளா்கள் தங்களின் நில உடைமை ஆவணங்களின் நகல்களை ஒப்படைத்தனா். பெரும்பாலான ஆவணங்கள் சரியாக இருப்பதால் இழப்பீடுகள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாட்டுக்குழு சாா்பில் இராம. உதயசூரியன், தங்கநாதன், சௌந்தர்ராஜன், சோ்மக்கனி, சுப்பிரமணியன், நாகராஜ், கோபி, வேல்முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT