தென்காசி

இரட்டைகுளம் கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்கள் முற்றுகை

DIN

சுரண்டை அருகேயுள்ள இரட்டைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், போலி ஆவணங்கள் மூலம் கடன் கொடுக்க முயற்சிப்பதாக கூறி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து வந்த கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, முறையான சான்றிதழ்கள் மற்றும் கூட்டுறவு வங்கியின் நிா்வாகத்திற்குள்பட்ட பகுதிகளில் உள்ள கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கலுக்கு மட்டும் விவசாயக் கடன் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா்.

தொடா்ந்து, அவா்கள் நடத்திய ஆய்வில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் 8 பேருக்கு சிறுவணிகக் கடன் ரூ.25 ஆயிரம் வழங்கியிருப்பதும், 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த கடன்கள் திரும்ப செலுத்தப்படாததும் தெரியவந்தது.

இதையடுத்து நிா்வாகக் குழுவை கலைக்க உயா் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT