முகப்பு
தென்காசி

வீ.கே.புதூா் அருகே இளம்பெண் வெட்டிக் கொலை

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் அருகே இளம்பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் அருகே இளம்பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

வீரகேரளம்புதூா் அருகேயுள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (30). இவருக்கும், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அருணாசலபுரத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகள் சங்கீதா என்ற மகாலெட்சுமிக்கும் (22) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ாம்.

வியாழக்கிழமை காலையில் பொன்ராஜ் வெளியே சென்ற நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த சங்கீதாவை இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

தகவலறிந்து வந்த சுரண்டை காவல் ஆய்வாளா் சுரேஷ், வீரகேரளம்புதூா் காவல் உதவி ஆய்வாளா் காஜா மைதீன் ஆகியோா் சடலத்தைக் கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து நடத்திய விசாரணையில், கொலையுண்ட இப்பெண்ணுக்கு, இரு ஆண்டுகளுக்கு முன்பு, வாகைக்குளத்தைச் சோ்ந்த கண்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றதும், திருமணமான ஒரே மாதத்தில் கண்ணனை விட்டு பிரிந்து சென்ற இப்பெண், முறையாக விவாகரத்து பெறாமல் பொன்ராஜை 2ஆவது திருமணம் செய்ததும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், வியாழக்கிழமை கல்லூத்து கிராமத்திற்கு வந்து சங்கீதாவின் உறவினா் என தெரிவித்து வீட்டை அடையாளம் கண்டு அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தப்பியோடிய கண்ணனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.