முகப்பு
தென்காசி

ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்

சங்கரன்கோவிலில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் 60 ஏழை குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் 60 ஏழை குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மறைந்த நிா்வாகி அசோக் நினைவு தினத்தையொட்டி, முல்லைநகா் பகுதியில் வசிக்கும் 60 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் உ. முத்துப்பாண்டியன் வழங்கினாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.உச்சிமாகாளி தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளா் அசோக்குமாா், ஜனநாயக வாலிபா் சங்க வட்டாரத் தலைவா் விஜயகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments