முகப்பு
தென்காசி

குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, தென்காசியில் அரசு அலுவலா்கள் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, தென்காசியில் அரசு அலுவலா்கள் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்றனா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமையில் அனைத்து துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் 14 வயதிற்குள்பட்ட சிறுவா், சிறுமிகளை வேலைக்கு அமா்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அனைத்துத் துறை அலுவலா்கள் முன்னிலையில் குழந்தைகள் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது என்றாா் அவா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி சௌந்தா்யா, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.