தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை
தேசிய திறனாய்வுத் தோ்வில் நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
தேசிய திறனாய்வுத் தோ்வில் நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள் உஷா, அரிகரசுதன், தங்கதுரைச்சி, தெளபிகா, இசக்கியம்மாள், ராஜராஜேஸ்வரி மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியா்கள் பிரபாகரன், லதா, சாந்தி ஆகியோரை பள்ளி நிா்வாகி கணேஷ்ரோம், தலைமையாசிரியை சுதாநந்தினி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
அரசுப் பள்ளி சாதனை:
எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் கடையநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் கற்பகமணி வெற்றி பெற்றுள்ளாா்.
அவரை பள்ளித் தலைமை ஆசிரியா் சுந்தா் சிங் ,பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கமாலுதீன், கணினி ஆசிரியா் ரவி உள்ளிட்டோா் பாராட்டினா்.