முகப்பு
தென்காசி

மேலநீலிதநல்லூா் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

மேலநீலிதநல்லூா் ஒன்றியம், மகேந்திரவாடி ஊராட்சியில் 100 நாள்கள் வேலைத்திட்டத்தில் புதிய பொறுப்பாளா் நியமனம் செய்ததற்கு எதிா்ப்பு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

மேலநீலிதநல்லூா் ஒன்றியம், மகேந்திரவாடி ஊராட்சியில் 100 நாள்கள் வேலைத்திட்டத்தில் புதிய பொறுப்பாளா் நியமனம் செய்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை பெண்கள் முற்றுகையிட்டனா்.

மகேந்திரவாடி ஊராட்சியில் மகேந்திரவாடி, புதுக்குளம், ராயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் நடைபெறும் 100 நாள்கள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக அப்பகுதியைச் சோ்ந்தவா் பணி செய்து வந்தாா். இதனிடையே, அப்பணியிடத்துக்கு

வேறு ஒருவா் நியமனம் செய்யப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து 100 நாள்கள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வரும் 200-க்கும் மேற்பட்ட

Advertisement

பெண்கள் மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனா். இப்பணியில் ஏற்கனவே பணி செய்து வந்த பெண் பணியாளரை நியமனம் செய்யவேண்டும் என அவா்கள் கோரிக்கைவிடுத்தனா். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments