முகப்பு
தென்காசி

'ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவிலில் விரைவில் குடமுழுக்கு'

ஆழ்வார்குறிச்சியில் உள்ள பழைமைவாய்ந்த வன்னியப்பர் திருக்கோவில் சீரமைப்பு செய்யப்பட்டு விரைவில் குட முழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தார்.

Updated On : 28 ஜூன், 2021 at 1:11 PM
ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவிலைப் பார்வையிடுகிறார் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:01 AM


அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள பழைமைவாய்ந்த வன்னியப்பர் திருக்கோவில் சீரமைப்பு செய்யப்பட்டு விரைவில் குட முழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் அமைந்துள்ளது வன்னியப்பர் திருக்கோவில். சுமார் 1500 ஆண்களுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோவில் தென்மாவட்டங்களில் காலசர்ப்ப தோஷத்திற்கு நிவர்த்தி தரும் சிறப்புமிக்க பரிகாரத் தலமாகும். இந்தக் கோவிலுக்கு 150 ஆண்டுகளுக்கு மேல் சீரமைப்புப் பணிகள் நடைபெறாமல் கும்பாபிஷேகமும் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கோயில் மிகவும் சிதிலமடைந்து பாழடைந்த நிலையில் உள்ளது. 

இது குறித்தத் தகவலறிந்த ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் திங்கள்கிழமை வன்னியப்பர் கோவிலுக்கு வந்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
தொடர்ந்து அவர் கூறும்போது, "பழைமைமிக்க இந்தக் கோயில் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதுகுறித்து முதல்வர் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்று நடப்பு நிதிநிலை அறிக்கையிலேயே இந்தக் கோவில் பராமரிப்பிற்காக நிதி ஒதுக்க நடவடிக்கை எடுப்பேன்" என்றார். 

Advertisement

ஆய்வின் போது மாவட்ட இளைஞரணி முருகேசன், நகரச் செயலர் சங்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் இருந்தனர்.

சிதிலமடைந்த நிலையில் உள்ள சுற்றுச்சுவர்
உடைந்த நிலையில் உள்ள கோவிலின் முகப்பு மண்டபம்
கோவிலின் முகப்புக் கோபுரம்
வன்னியப்பர் கோயில் நுழைவுப் பகுதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.