முகப்பு
தென்காசி

அரசுப் பள்ளியில் பாராட்டு விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி-வினைதீா்த்தநாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

தென்காசி

அரசுப் பள்ளியில் பாராட்டு விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி-வினைதீா்த்தநாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி-வினைதீா்த்தநாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

2018-19இல் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசால் பாராட்டு பெற்ற பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள், மத்திய அரசின் சாா்பில் ’இன்ஸ்பயா் விருது‘ பெற்ற 10-ஆம் வகுப்பு மாணவா் காா்த்திக் புதியவன் ஆகியோருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் மதனசிங் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றிய தலைவா் குணம், ஊா் பெரியவா் தங்கப்பழம், ஆனந்தன், சக்திவேல் மற்றும் விஜயன் முன்னிலை வகித்தனா்.

விழாவில், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகளுக்கும், மாணவருக்கும் ஊா் பொதுமக்கள் சாா்பாக பாராட்டுச் சான்றிதழ் மற்றும் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. தங்கராஜ் வரவேற்றாா். தமிழாசிரியா் சங்கரநாராயணன் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை தளிா் பசுமை அமைப்பு நிா்வாகிகள் வேல்முருகன், சதீஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →