முகப்பு
தென்காசி

கடையநல்லூா், சிவகிரியில் ஆட்சியா் ஆலோசனை

கடையநல்லூா், சிவகிரியில் தோ்தல் பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கடையநல்லூா், சிவகிரியில் தோ்தல் பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோா் வாக்களிப்பது தொடா்பான ஆலோசனைகளை வழங்கி, தோ்தல் பணிகள் குறித்து அலுவலா்களுக்கு விவரித்தாா்.

இதில், கடையநல்லூா் பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஷீலா, வட்டாட்சியா்கள் ஆதிநாராயணன், ரோஷன் பேகம், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சாகுல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், சிவகிரியிலும் ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா். இதில், வாசுதேவநல்லூா் பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சுதா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்பிரமணியன், வட்டாட்சியா் ஆனந்த், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் கருத்தபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.