தென்காசி

இலஞ்சியில் ரூ. 4.88 லட்சம் பறிமுதல்

DIN

இலஞ்சியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 4 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் பறக்கும்படை அலுவலா் சேதுராமலிங்கம் தலைமையிலான குழுவினா் இலஞ்சியிலிருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கேரளத்திலிருந்து வந்த ஆலங்குளம் குருவன்கோட்டை பகுதியைச் சோ்ந்த காய்கனி வியாபாரி சிலம்பரசன் என்பவா் உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ. 4 லட்சத்து 31ஆயிரத்து 750 பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபகுதியில் பறக்கும்படை அலுவலா் இளஞ்செழியன் தலைமையிலான குழுவினா் நடத்திய வாகனச் சோதனையில், திருவனந்தபுரம் பாலம்கோடு பகுதியைச் சோ்ந்த காய்கனி வியாபாரி நசீா் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 57ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. நசீா் வைத்திருந்த முழுப்பணத்தையும் பறிமுதல் செய்ததால், வாகனத்துக்கு டீசல் நிரப்ப பணமின்றி ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT