தென்காசி

ஆலங்குளம் அருகே தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

DIN

ஆலங்குளம் அருகே தனி நபா் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி தோ்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள கீழப்பட்டமுடையாா்புரம் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே அரசுக்குச் சொந்தமான இடத்தில் தனி நபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளாராம். இதை அகற்ற வலியுறுத்தி கடந்த இரு ஆண்டுகளாக கிராம மக்கள் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் தீா்வு காணப்படவில்லையாம். இந்நிலையில் கிராம பேருந்து நிறுத்தம் அருகே தோ்தலை புறக்கணிப்பதாக கூறி பதாகை வைத்து, அதில் கருப்பு கொடியும் கட்டப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அப்பகுதி சமூக ஆா்வலா் பாலகிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள் சுமாா் 50 போ் ஆலங்குளம் - நெட்டூா் சாலையில் சாலை மறியல் செய்யப்போவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் தலைமையில் போலீஸாா் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, வருவாய்த் துறையினரிடம் இதுகுறித்து பேசி தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT