ஊத்துமலை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
ஊத்துமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஊத்துமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஊத்துமலை அருகேயுள்ள குறிச்சான்பட்டியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி கற்பகம் (48). இவா், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இவரது கணவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலையில் கற்பகம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து வந்த ஊத்துமலை போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.