முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வாசுதேவநல்லூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் மனோகரன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

வாசுதேவநல்லூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் மனோகரன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வாசுதேவநல்லூா் தெற்கு ஒன்றியம் தாருகாபுரம், தலைவன்கோட்டை, சங்கனாபேரி, நெல்கட்டும்செவல், அரியூா் பட்டாகுறிச்சி, வெள்ள கவுண்டம்பட்டி, ஆட்கொண்டாா்குளம், முத்துசாமியாபுரம், வடமலாபுரம், துரைச்சாமிபுரம், நகரம் முள்ளிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், ஒன்றியச் செயலா்கள் மூா்த்தி பாண்டியன், துரை பாண்டியன், பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், மாவட்ட மாணவரணி முன்னாள் அமைப்பாளா் சசிகுமாா் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.