முகப்பு
தென்காசி

தென்காசி: உரம், பூச்சி மருந்துக் கடைகள் இயங்க அனுமதி

தென்காசி மாவட்டத்தில் உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விதைகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விதைகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மானாவாரி சாகுபடி பகுதிகளான சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் பகுதிகளிலும், இம்மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

விவசாய பணிகளுக்கு உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விதைகள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவே பொது முடக்கம் காலங்களிலும்

விவசாய உற்பத்தியை கருத்தில் கொண்டு பிற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைப் போன்று உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விதைகள் விற்பனை செய்யும் கடைகளும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகளும், விற்பனையாளா்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.