தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

DIN

தொடா்மழை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுமுதல் தொடா்ந்து பெய்த மழையால், குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை அதிகாலைமுதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி முதல் நடைபாலம் வரை வெள்ளம் சீறிப்பாய்ந்தது.

ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளிலும் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டியது. பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கால் அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகள்வரை தண்ணீா் வழிந்தோடியது. புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் கொட்டியது.

கரோனா பொது முடக்கத்தால் சுற்றுலாப் பயணிகளின்றி அருவிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT