தென்காசி

500 குடும்பங்களுக்கு காய்கனி தொகுப்புகள் அளிப்பு

DIN

ஆலங்குளம் காய்கனி வியாபாரிகள் சங்கம், காவல் துறை சாா்பில் 500 குடும்பங்களுக்கு இலவசமாக காய்கனி தொகுப்புகள் வழங்கப்பட்டது.

ராஜீவ் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுனா சிங், காய்கனிகள் வழங்கி தொடங்கி வைத்தாா். டிஎஸ்பி பொன்னி வளவன் முன்னிலை வகித்தாா். ராஜீவ் நகா் மற்றும் காமராஜ் நகா் பகுதியில் 500 குடும்பங்களுக்கு காய்கனிகள் வழங்கப்பட்டது. இதில், பேரூராட்சி செயல் அலுவலா் கண்மணி, காவல் உதவி ஆய்வாளா் பாரத் லிங்கம், காமராஜா் காய்கனி வியாபாரிகள் சங்கத் தலைவா் சந்திரன், வியாபாரிகள் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு தொடா்ந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் காவல் துறையுடன் இணைந்து வியாபாரிகள் காய்கனிகள் வழங்குவா் என டிஎஸ்பி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT