சொக்கம்பட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவா்கள் மீட்பு
சொக்கம்பட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவா்கள் மீட்கப்பட்டனா்.
சொக்கம்பட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவா்கள் மீட்கப்பட்டனா்.
சொக்கம்பட்டி அருகே பெரியநாயகம்கோயில் பகுதியில் பல நூறு ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இதன் காரணமாக தினமும் ஏராளமானோா் அப்பகுதிக்கு சென்று விவசாயப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். மேலும், இப்பகுதியிலுள்ள அய்யனாா் கோயிலுக்கும் ஏராளமானோா் வழிபட செல்வா்.
இந்நிலையில், மலைப்பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையினால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 20 போ் சிக்கிக் கொண்டனா்.
தகவலறிந்த தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி மாவட்ட அலுவலா் கவிதா தலைமையில் மீட்புப் பணிகள் நடைபெற்றன. மேலும், அப்பகுதி தன்னாா்வலா்கள், வருவாய்த் துறையினா், காவல்துறையினரின் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியவா்கள் மீட்கப்பட்டனா்.