முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் நல உதவி வழங்கல்

குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் நல உதவி வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூரில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் நல உதவி வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூரில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் அண்ணாத்துரை தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் டாக்டா் மூா்த்தி, முன்னாள் தலைவா் ஆடிட்டா் நாராயணன், குமரன்முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கணேசமூா்த்தி கொடி வணக்கமும், ரணதேவ் அரிமா வழிபாடும் வாசித்தனா். வட்டாரத் தலைவா் ஜாண் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் , அரிமா நிா்வாகிகள் வெங்கடேஸ்வரன், தெய்வநாயகம், ஜஸ்டின்ராஜ், சண்முகசுந்தரம், தனராஜு, மணிகண்டன், அய்யங்கண்ணு, வெங்கடகிருஷ்ணன், திருமலைசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கனகராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.