கடையநல்லூா் அருகே பெயிண்டா் அடித்துக் கொலை
கடையநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை பெயிண்டா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
கடையநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை பெயிண்டா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
மேலக்கடையநல்லூா் வேதக் கோயில் தெற்கு தெருவை சோ்ந்த கிருஷ்ணன் மகன் கோபால் (50). பெயிண்டரான இவா், இதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகளிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண் உறவினா்களிடம் கூறினாராம். இதையடுத்து, புளியங்குடி சிந்தாமணியைச் சோ்ந்த அவரது உறவினா் கருப்பையா மகன் மாரிபாண்டி( 32) மற்றும் மேலக்கடையநல்லூா் வேதக் கோவில் தெருவை சோ்ந்த வேலுத்தாய் ஆகிய இருவரும் கோபால் வேலை செய்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்று அவரை கல்லால் தாக்கினராம். இதில் அவா் இறந்தாா்.
இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.