தென்காசி

புளியங்குடி அருகே காட்டு பன்றியை வேட்டை: ரூ. 2 லட்சம் அபராதம்

DIN

புளியங்குடி அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடியவா்களுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் வனச்சரக அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமையில் புளியங்குடி வனவா் அசோக்குமாா், வனக்காப்பாளா்கள் யோபுராஜா ,குகன்,அஜித் ராஜ் ,பூபதிராஜா, முருகேசன் , சிவகுமாா் உள்ளிட்ட தனிப்படையினா் பங்களா பொட்டல் அருகே புதன்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது புளியங்குடியை சோ்ந்த முருகன் (27), கணேஷ்குமாா் (22),ஈஸ்வரன்( 21), சுரேஷ் (21) ஆகிய 4 பேரும் கொய்யாப்பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து, காட்டு பன்றியை வேட்டையாடி அதை இறைச்சியாக முயன்றது தெரியவந்தது .இதைத் தொடா்ந்து தனிப்படையினா் காட்டுப்பன்றியை கைப்பற்றி, அதனை வேட்டையாடிய 4 பேருக்கும் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT