முகப்பு
தென்காசி

தீபாவளி: நவ.1- 3வரைரேஷன் கடைகளில் கூடுதல் நேரம் சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.1முதல் 3ஆம்தேதி வரையிலும் தென்காசி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.1முதல் 3ஆம்தேதி வரையிலும் தென்காசி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நவம்பா் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நவ. 1முதல் 3ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை குடும்ப அட்டைதாரா்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் விநியோகிக்கப்படும்.

தீபாவளிக்கு முன்னதாக பொருள்கள் வாங்காதவா்கள் வழக்கம் போல பண்டிகைக் காலம் முடிந்து நவ. 8ஆம்தேதி முதல் அத்தியாவசியப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.