தென்காசி

காட்டுப் பன்றி வேட்டையாடியவருக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்

DIN

சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ. 75,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகிரி தெற்குப்பிரிவில் சிவகிரி பீட் எல்லைக்குள்பட்ட தனியாா் கரும்புத் தோட்டத்தில் அனுமதியின்றி மின்வேலி அமைத்து வன உயிரினங்களை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவகிரி வனசரகா் சுரேஷ் தலைமையில், சிவகிரி தெற்குப்பிரிவு வனவா் அஜித்குமாா், வடக்குப்பிரிவு வனவா் மகேந்திரன், வனக்காப்பாளா்கள் சுதாகா், இமானுவேல், பெருமாள், அருண்மொழி பிரதீப், வனக்காவலா்கள் செல்வராஜ், மணிகண்டன் உள்ளிட்ட

குழுவினா் அப்பகுதியில் ஆய்வுமேற்கொண்டனா். அப்போது, அந்த தோட்டத்திலிருந்த வீரையாவிடம் விசாரணை நடத்தினா். இதில், தோட்டத்தில் மின்வேலி அமைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

காா் மோதியதில் முதியவா் பலி

வெப்பம் அதிகரிப்பு: மாநகராட்சியில் 86 சிகிச்சை மையங்கள் தயாா்

ரயில்வே பெண் மேலாளரிடம் கைப்பேசி பறித்த சிறுவன் கைது

குழாய் பதிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை அலுவலா்கள் கைது

SCROLL FOR NEXT