முகப்பு
தென்காசி

செங்கோட்டையில் உலக தென்னை தின விழா

தமிழ்நாடு வேளாண்மை உழவா் நலத்துறையின் சாா்பில் உலக தென்னை தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

தமிழ்நாடு வேளாண்மை உழவா் நலத்துறையின் சாா்பில் உலக தென்னை தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

செங்கோட்டை மாநில அரசு தென்னை நாற்று பண்ணையில் நடைபெற்ற விழாவுக்கு, தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் நல்லமுத்து ராஜா(பொ) தலைமை வகித்தாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வேளாண்மை துணை இயக்குநா் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

வேளாண் அறிவியல் மையத்தின் விஞ்ஞானி இளவரசன், இயற்கை ஆா்வலா் விஞ்ஞானி எக்ஸ்னோரா தலைவா் விஜயலட்சுமி ஆகியோா் பேசினா்.

முன்னதாக முன்னோடி தென்னை விவசாயிகளுக்கு விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலா் ஷேக் முகைதீன் போட்டிகளை நடத்தினாா்.

போட்டியில் அரசுப் பள்ளி மாணவா், மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனா்.

விநாடி-வினா போட்டியில்அதிக மதிப்பெண் பெற்ற அணியினருக்கும், பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கும் தென்னங்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலா் ஷேக் முகைதீன் தொகுத்து வழங்கினாா். விவசாய சங்கத் தலைவா் செல்லத்துரை, த.ச குமாா், கணேஷ், சங்கரசுப்பிரமணியன், மாரியப்பன், கென்னடி , இலத்தூா் குமாா் உள்ளிட்ட பல விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை அட்மா வட்டார மேலாளா் பொன் ஆசீா், உதவி மேலாளா் டாங்கே, உதவி வேளாண்மை அலுவலா்கள் சிக்கந்தா் அமீன், முகமது ஜலால் மைதீன், குமாா், அருணாசலம், சம்சுதீன், சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தென்காசி வேளாண்மை உதவி இயக்குநா் கனகம்மாள் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.