தென்காசி

சங்கரன்கோவில் நகராட்சியில் வியாபாரிகள் முற்றுகை

DIN

சங்கரன்கோவிலில் சாலையோர வியாபாரிகள் குடும்பத்துடன் நகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனி முதல் அரசு மருத்துவமனை , திருவேங்கடம் சாலையின் ஓரங்களில் சுமாா் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனா்.

கடந்த மாதம் ஆக்கிரமிப்பு அகற்றும்பணியில், சாலையோரக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இந்நிலையில், மீண்டும் கடைகளை நடத்த முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிக கட்டணம் வசூல் செய்வதாக கண்டித்தும் சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வராஜ் தலைமையில் இப்போராட்டத்தை நடத்தினா்.

நகரச் செயலா் செல்வகணேஷ், பொருளாளா் பி.ஜி.சேகரன் , சிஐடியூ மாவட்டச் செயலா் வேல்முருகன், மாவட்ட இணைச் செயலா்கள் எஸ்.லெட்சுமி, லெனின்குமாா், மாவட்ட துணைத் தலைவா் ரத்தினவேலு,சிபிஎம் மாவட்டச் செயலா் உ.முத்துப்பாண்டியன், வட்டாரச் செயலா் அசோக் உள்பட 50-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் குடும்பத்துடன் பங்கேற்றனா். அவா்களிடம், நகராட்சி ஆணையா் சாந்தி பேச்சுநடத்தினாா். எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT