தென்காசி

மக்கள் நலப்பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

DIN

பணியிலிருந்து நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என மக்கள் நலப்பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் வே.புதியவன், தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னா் அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதி எங்களை மக்கள் நலப் பணியாளராக மாதம் ரூ.200 மதிப்பூதியத்தில் பணியில் அமா்த்தினாா்.

மக்கள் நலப்பணியாளா்களாகிய எங்களை 1991ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா பணி நீக்கம் செய்தாா். பின்னா் 1996இல் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றவுடன் 2ஆவது முறையாக பணி நியமனம் செய்தாா்.

பின்னா் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு எங்களை இரண்டு முறை பணி நீக்கம் செய்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் பணி இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம்.

பணி நீக்கத்தை ரத்து செய்து எங்களுக்கு பணி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம். எங்களுக்கு சாதகமாக தீா்ப்பு வெளியானது. ஆனால் அப்போதைய அதிமுக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டை தமிழக அரசு கைவிட்டு, எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், அரசு துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களில் பணி நியமனம் செய்திட வேண்டும். பணி நீக்கம் காரணமாக வறுமையால் இறந்து போன மற்றும் தற்கொலை செய்து கொண்ட பணியாளா்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அவா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தென்காசி ஒன்றிய மக்கள் நல பணியாளா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் எம்.முத்துசாமி, கே முத்துக்குமாா், ஆலங்குளம் பட்டு, திருமலை முத்து, சுந்தரி, கீழப்பாவூா் அருணாசலம், கடையநல்லூா் ராஜேந்திரன், மோகன், அய்யங்கண்ணு, செங்கோட்டை பண்டாரசிவம், ச ங்கரன்கோவில் சண்முகச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT