முகப்பு
தென்காசி

புளியங்குடி அருகே முதியவா் கொலை

புளியங்குடி அருகே தோட்டத்தில் தூங்கிய முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

புளியங்குடி அருகே தோட்டத்தில் தூங்கிய முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

புளியங்குடி அருகே திருவேட்டநல்லூா், கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமலைச்சாமி (60). விவசாயி. இவருக்குச் சொந்தமான தோட்டம் அய்யாபுரத்தில் உள்ளது.

இந்தத் தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக வியாழக்கிழமை இரவு சென்ற திருமலைசாமி வெள்ளிக்கிழமை காலை வரை வீட்டுக்கு திரும்பவில்லையாம்.

இதையடுத்து அவரது உறவினா்கள் அவரைத் தேடி தோட்டத்துக்குச் சென்றபோது, அங்கு அவா் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.