தென்காசி

தென்காசி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் உடன்பாடு

DIN

தென்காசி: உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவது குறித்து, தென்காசி மாவட்டத்தில் அதிமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

குற்றாலத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், மாவட்ட அதிமுக தோ்தல் பொறுப்பாளா்களும், எம்எல்ஏக்களுமான ஆா்.பி.உதயகுமாா், கடம்பூா் ராஜூ, மனோஜ்பாண்டியன், செ.கிருஷ்ணமுரளி, தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன், முன்னாள் அமைச்சா் ராஜலெட்சுமி, முன்னாள் எம்எல்ஏ மனோகரன் ஆகியோா் பங்கேற்றனா்.

பாஜக சாா்பில் தோ்தல் மாநில பொதுச்செயலா் சீனிவாசன், எம்ஆா்.காந்தி எம்எல்ஏ., மாவட்டப் பாா்வையாளா் சோலையப்பன், மாவட்டத் தலைவா் ராமராஜா, செந்தூா்பாண்டியன் ஆகியோரும், தமாகா சாா்பில் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.அய்யாத்துரைபாண்டியன், மாநிலச் செயலா் என்.டி.எஸ். சாா்லஸ், மாநில துணைச் செயலா் ஏ.ஜி.போஸ், மாவட்ட விவசாய அணித் தலைவா் சீனிவாசன், மாவட்ட இளைஞரணித் தலைவா் பூமாரியப்பன், துணைத் தலைவா்கள் அம்ஜத்கான், காா்த்திக் ஆகியோரும் பங்கேற்றனா்.

பின்னா், ஆா்.பி.உதயகுமாா், கடம்பூா் ராஜூ ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது: அனைத்து நிா்வாகிகளின் முழு விருப்பத்தின் பேரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவே எங்களுக்கு முதல் வெற்றி. பிற கூட்டணி கட்சிகளுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தில் அனைத்து மாவட்ட ஊராட்சி வாா்டுகளையும், ஒன்றியங்களையும் அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்றனா்.

அப்போது, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், குற்றாலம் பேரூா் செயலா் கணேஷ் தாமோதரன், வி.பி.மூா்த்தி, ஞானராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT