தென்காசி

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள்வாக்களிப்பதில் சிக்கல்

DIN

கடையநல்லூா்: தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தலில் அரசு ஊழியா்கள் , ஆசிரியா்கள் வாக்களிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

கடையநல்லூா் ஒன்றியத் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கும், அரசு அலுவலகங்களில் பணிபுரிபவா்களுக்கும், குருவிகுளம் உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு தோ்தல் பணி ஒதுக்கப்பட்டு கோவில்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் தோ்தல் பயிற்சி வகுப்புகளுக்கான உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

கடையநல்லூா் ஒன்றியத்திலும் குருவிகுளம் ஒன்றியத்திலும் ஒரே தேதியில் அதாவது அக்டோபா் 9ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ள நிலையில் கடையநல்லூா் ஒன்றியத்தை சோ்ந்த அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் வாக்களிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது,

எனவே அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் முதல் கட்ட தோ்தல் நடைபெறும் இடங்களுக்கு இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறும் இடங்களில் உள்ளவா்களை தோ்தல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவா்கள் வாக்களிப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT