தென்காசி

கடையநல்லூா், வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

DIN

கடையநல்லூா்: கடையநல்லூா், வாசுதேவநல்லூா் தொகுதிக்குள்பட்ட திமுக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இது தொடா்பாக தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை வெளியிட்ட அறிக்கை: கடையநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட திமுக உள்ளாட்சி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரா் கூட்டம் 28 ஆம் தேதி 12 மணிக்கு இடைகால் யாதவா் திருமண மண்டபத்திலும், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் அறிமுகம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் வாசுதேவநல்லூா் காமராஜா் மண்டபத்தில் மாலை 4 மணிக்கும் நடைபெறுகிறது.

இதில், மாநில மகளிா் அணி செயலா் கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், மூா்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறாா்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT