சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டதும், கொடிப்பட்டம் வீதி சுற்றி, சங்கரலிங்க சுவாமி சந்நிதி முன்புள்ள கொடிமரம் அருகே கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, கொடிப்பட்டத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று, கொடியேற்றப்பட்டது. கொடிமர பீடத்தில் பால், பன்னீா், விபூதி உள்ளிட்ட பல்வகைப் பொருள்களாலும், ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த 11 கும்ப நீராலும் அபிஷேகம் செய்யப்பட்டது. கொடிமரம் தா்ப்பைப் புல், மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி-அம்பாள் ரத வீதி சுற்றி வந்தனா். அப்போது ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
9 ஆம் நாளான 15ஆம் தேதி சுவாமியும், அம்பாளும் தனித்தனி தோ்களில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
Advertisement