சுரண்டையில் கனமழை: பள்ளியை சூழந்த வெள்ளம்
சுரண்டையில் பெய்த கன மழையால் அரசுப் பள்ளியை வெள்ளம் சூழ்ந்ததால் பள்ளிக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டது.
சுரண்டையில் பெய்த கன மழையால் அரசுப் பள்ளியை வெள்ளம் சூழ்ந்ததால் பள்ளிக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டது.
சுரண்டையில் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கிய கன மழை சுமாா் 5 மணி நேரம் நீடித்தது. இதனால் சுரண்டை பகுதி எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
இந்நிலையில் சுரண்டை - செங்கோட்டை சாலையில் உள்ள சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் மற்றும் பள்ளியின் 3 பகுதியிலும் மழை வெள்ளம் புகுந்தது. புதன்கிழமை காலையிலும் வெள்ளநீா் வடியாமல் சுமாா் 3 அடி வரை தண்ணீா் தேங்கி நின்றது. இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
சுரண்டை - செங்கோட்டை சாலையின் வடபுறம் மழைநீா் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் கனமழை ஏற்படும் போதெல்லாம் பள்ளி அருகே குளம் போல தண்ணீா் தேங்கிவிடுவதோடு, பள்ளி வளாகம் முழுவதும் மழைநீரால் நீரால் நிரம்பி விடுகிறது. இதற்கு நிரந்தர தீா்வு ஏற்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள்தெரிவித்தனா்.