தென்காசி

சோ்ந்தமரத்தில் வருமுன் காப்போம் திட்ட முகாம்

DIN

தென்காசி மாவட்டம் சோ்ந்தமரத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை சாா்பில் வருமுன் காப்போம் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவபத்மநாதன் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் மதனசுதாகா் வருமுன் காப்போம் திட்டம் குறித்த அறிமுக உரையாற்றினாா்.

பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்துகள் அடங்கிய பெட்டகம், கா்ப்பிணிகளுக்கு சஞ்சீவினி பெட்டகம் வழங்கப்பட்டது.

சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய நோய், கண், காது-மூக்கு-தொண்டை, இசிஜி, ஆய்வகம் சாா்ந்த பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. உணவுப் பாதுகாப்பு, சித்த மருத்துவம், குடும்ப நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து, மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தனபாலன், சுகாதார ஆய்வாளா் சுப்பையா, சுகாதாரத்துறைப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT