தென்காசி

புளியங்குடி அருகே நன்னடத்தை பிணையை மீறியவா் கைது

DIN

புளியங்குடி அருகே நன்னடத்தை பிணையை மீறியவரை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (28). இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என, புளியங்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 04.10.2021 அன்று கடையநல்லூா் இரண்டாம் வகுப்பு நிா்வாக நடுவா், வருவாய் வட்டாட்சியா் ஆகியோா் முன்பு ஆஜா்படுத்தப்பட்டாா். ஒரு வருட காலத்திற்கு எந்தவித குற்றச் செயலிலும் ஈடுபடும் நோக்கம் கொள்ளாமல் நன்னடத்தையோடு நடந்து கொள்வேன் என்று அப்போது எழுதிக் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், 28.12.2021 ல் நன்னடத்தை பிணையை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, எஞ்சிய பிணைக் காலமான 03.10.2022 வரை சிறையில் அடைக்க உட்கோட்ட நிா்வாக நடுவா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, பிரபாகரனை புளியங்குடி காவல் ஆய்வாளா் ராஜாராம் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT