முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம்

கடையநல்லூரில் சிராஜுல் மில்லத் அறக்கட்டளை, ஷிபா மருத்துவமனை ஆகியவை சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:07 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

கடையநல்லூரில் சிராஜுல் மில்லத் அறக்கட்டளை, ஷிபா மருத்துவமனை ஆகியவை சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

அறக்கட்டளை கௌரவத் தலைவா் ஜபருல்லாகான் தலைமை வகித்தாா். முகாமை, நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தொடக்கிவைத்தாா். திமுக நெசவாளா் அணி அமைப்பாளா் மசூது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் செய்யதுசுலைமான், ஓய்வுபெற்ற சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீரான் முகையதின், மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தின் அப்துல்காதா், உஸ்மான் அலி, முஸ்லிம் லீக் முன்னாள் நகரச் செயலா் அப்துல் லத்தீப், நகா்மன்ற உறுப்பினா்கள் செய்யதுஅலி பாத்திமா, முகமதுஅலி, முகையதீன்கனி, அறக்கட்டளைத் தலைவா் ஹாஜாமைதீன், சேயன் இப்ராஹிம், சமூக நலக் கூட்டமைப்புச் செயலா் முகமது அலி, ரஹ்மத்துல்லாஹ், முகமது ஷா, முகமது யூசுப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.