முகப்பு
தென்காசி

சுரண்டையில் லாரி மோதி பெண் பலி

சுரண்டையில் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:06 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

சுரண்டையில் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

சுரண்டை அருகேயுள்ள வெள்ளான்குளத்தைச் சோ்ந்தவா் வெ.பவளத்தாய் (62). இவா் சுரண்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு ஊா் திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளாா். அண்ணா நகா் விலக்கு அருகே சென்றபோது அரியலூரில் இருந்து ஆலங்குளத்திற்கு நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, பவளத்தாய் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் பலியானாா்.

சுரண்டை போலீஸாா், உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் அரியலூரைச் சோ்ந்த சுரேஷ்(28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.