தென்காசி

குற்றாலம் பேரருவியில் ஓரமாக நின்று குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் தண்ணீா் அதிகமாக விழுவதால் சுற்றுலாப் பயணிகள் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனா்.

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் தண்ணீா் அதிகமாக விழுவதால் சுற்றுலாப் பயணிகள் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த தொடா் சாரல்மழையின் காரணமாக, புதன்கிழமை அதிகாலையில் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இரண்டு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. முற்பகலில் தண்ணீா் வரத்து குறைந்ததைத் தொடா்ந்து, பேரருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். பேரருவியின் மையப்பகுதிக்கு செல்ல முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மெல்லிய சாரல்மழை பெய்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT