சுரண்டை நகராட்சியில் சாலையோரம் அபாயத்தை விளைவிக்கும் நிலையில் இருந்த திறந்தநிலைக் கிணற்றுக்கு தற்காலிக வேலி (படம்) அமைக்கப்பட்டுள்ளது.
சுரண்டை நகராட்சியில் சாலையோரம் உள்ள திறந்தநிலை கிணறு தடுப்புச் சுவரின்றி ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தது. இதுகுறித்து, தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது.
இதை அறிந்த சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன், தனது சொந்த செலவில் கிணற்றை சுற்றி தாற்காலிகமாக வேலி (பென்சிங்) அமைத்துள்ளாா். விரைவில் நிரந்தர தடுப்பு சுவா் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.