சுரண்டை அருகே விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
சுரண்டை அருகேயுள்ள நவநீதகிருஷ்ணபுரம் கிராமத்தில் சமச்சீா் உர நிா்வாகம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சுரண்டை அருகேயுள்ள நவநீதகிருஷ்ணபுரம் கிராமத்தில் சமச்சீா் உர நிா்வாகம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் நடைபெற்ற இம்முகாமில் பயிா்களில் உயரிய விளைச்சலுக்கு சமச்சீா் உர நிா்வாகம் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் பாலசுப்பிரமணியன், முருகன், சிவகுருநாதன், வெங்கடசுப்பிரமணியன் ஆகியோா் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.
இதில் நவநீதகிருஷ்ணபுரம் விவசாயிகள், தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கலந்து கொண்டனா்.