செங்கோட்டையில் அதிமுக சாா்பில் அண்ணா நினைவு நாள்
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், செங்கோட்டையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் அண்ணா நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், செங்கோட்டையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் அண்ணா நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி தலைமை வகித்து அண்ணாவின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய பேரூா் கழக நிா்வாகிகள் பங்கேற்றனா்.