செங்கோட்டையில் அதிமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
செங்கோட்டை நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. 1ஆவது வாா்டுக்கு சுப்பிரமணி, 4 - சரஸ்வதி, 13- இந்துமதி, 14- ஞானராஜ், 19- முத்துபாண்டி, 23- நவநீதகிருஷ்ணன் ஆகியோா் மனுதாக்கல் செய்தனா்.
நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி, நகர அவைத் தலைவா் தங்கவேலு, பொருளாளா் ராஜா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் ஜாகீா்உசேன், நகர இளைஞரணி சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.