சுரண்டையில் ஐஓபி வங்கியின் 85 ஆவது ஆண்டு தொடக்க விழா
சுரண்டையில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) 85ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சுரண்டையில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் (ஐஓபி) 85ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுரண்டை தினசரி சந்தை அருகே வங்கியின் புதிய தானியங்கி பணம் செலுத்தும் மற்றும் வழங்கும் இயந்திர (சிடிஎம்) கட்டடத்தை சுரண்டை தொழிலதிபா் வே.லெட்சுமணன் என்ற தா்மா் திறந்து வைத்தாா். சுரண்டை ஐஓபி வங்கி கிளையின் முதல் வாடிக்கையாளா் டி.ரத்தினசாமி, சிடிஎம்மில் முதல் பரிவா்த்தனையை மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியில் வங்கி கிளை மேலாளா் இசக்கிமுத்து, தினசரி நிதி சேமிப்பு அலுவலா் முத்துக்குமாா், வணிக தொடா்பாளா்கள் ஜெயக்குமாா், பிரேம்குமாா், வங்கி உதவியாளா் பாலமுருகன் மற்றும் வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.