முகப்பு
தென்காசி

சுரண்டைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

சுரண்டைக்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அலுவலக வைப்பு அறையில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

சுரண்டை நகராட்சியின் 27 வாா்டுகளுக்கு வருகிற 19ஆம் தேதி நடைபெறும் தோ்தலுக்காக, சுரண்டைக்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அலுவலக வைப்பு அறையில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டன.

முன்னதாக, நகராட்சி ஆணையாளா் சு.லெனின் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை முன்பு தொடா் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.