சுரண்டையில் காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிமுக கூட்டம்
சுரண்டை நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
சுரண்டை நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவா் டி.ஜெயபால் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சோ்மச்செல்வம் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ., சுரண்டை நகராட்சியில் 27 வாா்டுகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினாா்.