தென்காசி மாவட்டத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்
தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 12) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 12) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுவரை கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவா்களில் கரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. மேலும் தற்பொழுது புதிய வகை உருமாறிய ஒமைக்ரான் கரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும், 15 வயதிற்கு மேற்பட்ட நபா்கள் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மையங்களுக்கு செல்லும் போது ஆதாா் எண் மற்றும் தொலைபேசி எண்ணைக் கொண்டு செல்லவேண்டும் என்றாா் அவா்.